பிரெளசர் 'பிரளயத்திற்கு' தயாராகும் கூகுள்!

இன்டர்நெட் பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது, அடிப்படையானது பிரெளசர்.
தற்போது பல வகையான பிரெளசர் வலையுலகில் உலவிக் கொண்டுள்ளன. அதில் அதிகம் பிரபலமானது இன்டர்நெட் எக்ஸ்புளோரர்தான். ஆகஸ்ட் மாத சந்தை நிலவரப்படி இன்டர்நெட் பயன்பாட்டாளர்களில் 73 சதவீதம் பேர் இதைத்தான் பயன்படுத்துகின்றனர்.
இதுதவிர பயர்பாக்ஸ் (19.73%), சஃபாரி (6.73%), ஒபேரா (0.74%) ஆகிய பிரவுசர்களும் புழக்கத்தில் உள்ளன.
முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பங்கு 90 சதவீதமாக இருந்தது. ஆனால் பயர்பாக்ஸ் வந்த பின்னர் எக்ஸ்புளோரரின் பங்கு குறைந்து விட்டது.
இந் நிலையில் மைக்ரோசாப்ட்டுக்கு இன்னொரு அடியாக கூகுளும் பிரெளசர் உலகில் கால் எடுத்து வைக்கிறது. தனது பிரவுசருக்கு குரோம் என பெயரிட்டுள்ளது கூகுள்.
இதுதொடர்பான அனைத்து விவரங்களும் கூகுள்குரோம் இணையதளத்தில் உள்ளன (http://www.gchrome.com/). இந்த பிரெளசர் பல விசேஷங்கள் உள்ளடங்கியுள்ளன.
தேடுதல், வீடியோ ஸ்ட்ரீமிங், இமேஜ் சர்ச், இமெயில் உள்ளிட்ட பல பயன்பாடுகளை தற்போது கூகுள் தன் பக்கம் வைத்துள்ளது. இந் நிலையில் தனது 'குரோம் பிரெளசர்' மூலம் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளது கூகுள்.
இந்த பிரெளசரின் 'பீட்டா வெர்சன்' நாளை அறிமுகமாகவுள்ளது.
இன்டர்நெட் உலகம், குரோம் 'பேட்டை' ஆகுமா, கூகுள் சவாலை எக்ஸ்புளோரரும், பயர்பாக்ஸும் சமாளிக்குமா என்பதை என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
Download Browsers:
http://explore.oneindia.in/downloads/browsers/
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications