ஒரு கண்ணை தோண்டியவர் மருத்துவமனையில் இன்னொரு கண்ணையும் தோண்டினார்

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் அடகா கிராமத்தைச் சேர்ந்தவர் முதுகப்பா எல்லப்பா கரடி (55). இந்த கிராமத்தில் சங்கராஜா சுவாமிகள் மடம் உள்ளது. தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்ட முதுகப்பா, கடந்த 28ம் தேதி நள்ளிரவு மடத்துக்கு சென்றார்.
தனது கனவில் சங்கராஜா சுவாமிகள் தோன்றி, கண் கேட்டதாக கூறி, தனது வலது கண்ணை கட்டை விரலால் தோண்டி எடுத்து வைத்து சாமி கும்பிட்டார். கண்ணில் இருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. வலி தாங்காமல் அழுதார்.
ஒரு கண்ணில் ரத்தமும், மறு கண்ணில் கண்ணீருமாய் துடித்த முதுகப்பாவை பாதாமி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று மற்றொரு கண்ணையும் தோண்டி எடுத்துவிட்டார் முதுகப்பா. இன்று அதிகாலை 3 மணியளவில் தனது இடது கண்ணையும் தோண்டி எடுத்தார். கண்ணிருந்து இடத்தில் ரத்தம் வழிய, கையில் தோண்டி எடுத்த கண்ணோடு உட்கார்ந்திருந்தார் முதுகப்பா. சுமார் 4.30 மணியளவில் இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து டாக்டர்கள் விரைந்து வந்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். எனினும் அந்த கண்ணை மீண்டும் வைக்க முடியாத நிலை உள்ளதாம்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications