ஓகனேக்கலில் வெள்ளம்-மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஓகனேக்கல்: கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஓகனேக்கலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் மீண்டும் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்குள்ள அணைகளிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அபரிமிதமாக வரும் தண்ணீர் காரணமாக ஓகனேக்கல்லில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கு காரணமாக ஓகனேக்கல், ஒட்டமலை, பில்லிகுண்டு ஆகிய பகுதிகளில் மீன் பிடி நிறுத்தப்பட்டு விட்டது. ஓகனேக்கல் அருவிப் பகுதிகளில் பரிசல் சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்திலிருந்து திறந்து விடப்பட்டுள்ள நீர் ஞாயிற்றுக்கிழமை முதல் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையில் 88.980 அடி தண்ணீர் இருந்தது. மொத்த கொள்ளளவு 120 அடியாகும். அணைக்கு விநாடிக்கு 46 ஆயிரத்து 348 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 13 ஆயிரத்து 4 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications