மீனவர்கள் மாயம்-நாகையில் மீனவர்கள் ஸ்டிரைக்
நாகை: கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கோரி நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகை மாவட்டம், செருதூரைச் சேர்ந்த நாகப்பன் என்பவரது பைப்பர் படகில் குப்புசாமி, ராஜீவ் காந்தி, சிவ சுப்பிரமணியன், ரமேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 23ம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
ஆனால் அவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. அவர்களை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றனரா, அல்லது கடல் காற்றில் கரை மாறி சென்றுவிட்டனரா என்பது தெரிவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மீனவர்கள் காணமல் போன மீனவர்களை கண்டுபிடித்து தருமாறு மீன் வளத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மீனவ கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மீனவர்களை கண்டுபிடித்துத் தரக்கோரி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் மீனவர்களை கண்டுபடிக்கும் வரை இந்தப் போராட்டம் தொருடம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications