வைத்திலிங்கம் அமைச்சரவையில் ரங்கசாமி மருமகன்
புதுச்சேரி: புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் மருமகன் நமச்சிவாயம், புதிதாக ஆட்சி அமைக்க உள்ள வைத்திலிங்கத்தி்ன் அமைச்சரவையி்ல இடம் பெறுகிறார்.
புதுச்சேரி முதல்வராக இருந்த ரங்கசாமி ராஜினாமா செய்ததையடுத்து புதிய முதல்வராக வைத்திலிங்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது அமைச்சரவையில் இடம்பெற போகும் அமைச்சர்கள் குறித்து டெல்லியில் கட்சி தலைமையுடன் வைத்திலிங்கம் நேற்று ஆலோசனை நடத்தினார். அவர் தந்த அமைச்சர்கள் பட்டியலுக்கு கட்சி மேலிடம் ஒப்புதல் அளித்தது.
ரங்கசாமி அமைச்சரவையில் ஏற்கனவே அமைச்சர்களாக இருந்த வல்சராஜ், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான் ஆகியோர் புதிய அமைச்சரவையில் மீண்டும் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் புதிய அமைச்சராக உழவர்கரை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ நமச்சிவாயமும் இடம் பெற்றுள்ளார்.
இவர் முன்னாள் முதல்வர் ரங்கசாமியின் மருமகன் (அண்ணன் மகளை மணந்தவர்) ஆவார். வன்னியர் சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் நமச்சிவாயத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரங்கசாமிக்கு எதிராக அமைச்சர்கள் போர்க் கொடி உயர்த்தியபோது அமைச்சர்களுக்கு ஆதரவாக நமச்சிவாயம் செயல்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதிய அமைச்சர்களின் பட்டியலை ஆளுநரிடம் வைத்திலிங்கம் இன்று முறைப்படி வழங்கினார். இந்த பட்டியல் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.
புதிய அமைச்சரவை வரும் 4ம் தேதி பதவி ஏற்க உள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications