துபாய் ஈமான் இஃபதார் விருந்தில் இந்திய தூதர்
இந்த விருந்து நிகழ்ச்சியினை ஆண்டுதோறும், ஈமான் அமைப்பு துபாய் தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ரமலான் மாதம் முழுவதும் நடத்தி வருகிறது. இதன் மூலம் தினமும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்று வருகின்றனர்.
செப்டம்பர் 1 ஆம் தேதி (திங்கட்கிழமை) ரமலான் மாதம் துவங்கியதையடுத்து நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியில் கடந்த வருடம் பங்கேற்ற இந்திய கன்சல் ஜெனரல் வேணு ராஜாமணி இவ்வருடமும் தான் முதல் நபராக பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து மக்களோடு மக்களாக நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தனது குடும்பத்தினருடன் வேணு ராஜாமணி பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த கன்சல் ஜெனரலை ஈமான் அமைப்பின் தலைவரும், துபாய் ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குருப்பின் நிர்வாக இயக்குநருமான அல்ஹாஜ் சையது எம் ஸலாஹுத்தீன், கல்விக் குழுத் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் இயக்குநர் ஹமீத் ஸலாஹுத்தீன், பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், கல்விக்குழு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்சல் ஜெனரல் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்து வரும் இம்மாபெரும் பணியைப் பாராட்டினார். ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் முதுவை ஹிதாயத், யஹ்யா முஹியித்தீன், கீழக்கரை ஹமீது யாசின், இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். பொதுநல ஆர்வலர் ஜெயந்தி சுரேஷ் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!













Click it and Unblock the Notifications