மும்பை பதிப்பை தொடங்கும் தினத்தந்தி-தினகரன்

முன்னணி தமிழ் நாளிதழ்களான தினத்தந்திக்கும், தினகரனுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந் நிலையில் மும்பையில் தனது பதிப்பை தொடங்கப் போவதாக தினத்தந்தி சமீபத்தில் அறிவித்தது. நாளை தினத்தந்தியின் மும்பைப் பதிப்பு தொடங்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து தினகரனும் தனது மும்பை பதிப்பைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. இதுவும் நாளையே தனது மும்பைப் பதிப்பைத் தொடங்குகிறது. சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த தினகரன் 11வது பதிப்பாக தனது மும்பைப் பதிப்பை தொடங்குகிறது.
இதுகுறித்து தினகரன் மார்க்கெட்டிங் பொது மேலாளர் விஜய் பாபி கூறுகையில், மும்பை பதிப்பு எங்களது 11வது பதிப்பாகும். அனைத்துப் பக்கங்களும் வண்ணத்தில் மிளிரும் வகையில் இந்த மும்பை பதிப்பு வெளியாகவுள்ளது.
50,000 பிரதிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு மும்பை பதிப்பு தொடங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
தினகரன் நாளிதழ் சமீபத்தில் 10 லட்சத்து 12 ஆயிரத்து 243 பிரதிகளைத் தொட்டது என்பது நினைவிருக்கலாம்.
தினகரன் நாளிதழ் மும்பை பதிப்பைத் தொடர்ந்து புனேவிலும் ஒரு பதிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதேசமயம், தினத்தந்தி, தலைநகர் டெல்லியில் தனது பதிப்பைத் தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பல காலமாகவே தமிழில் விற்பனையில் தினத்தந்தி தான் முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications