துபாய் அட்லாண்டிஸ் ஹோட்டல் தீயில் சேதம்
துபாய்: துபாயில் உள்ள பிரபல அட்லாண்டிஸ் ஹோட்டலில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில், ஹோட்டலின் ஒரு பகுதி சேதமடைந்தது.
துபாயின் பாம் ஜூமைரா பகுதியில் உள்ள இந்த ஹோட்டல் 2.5 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட ஐந்து நட்சத்திர ஹோட்டலாகும்.
இந்த ஹோட்டலின் லாபியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் ஹோட்டலின் ஒரு பகுதி சேதமடைந்து விட்டது. விபத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஹோட்டலில் உள்ள தண்ணீர்த் தொட்டி உலகின் மிகப் பெரிய தண்ணீர்த் தொட்டிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹோட்டலில் 1539 அறைகள் உள்ளன.
தீவிபத்து ஏற்பட்டபோது 270 பேர் ஹோட்டலில் இருந்தனர். அவர்களை போலீஸார் பத்திரமாக மீட்டு வெளியேற்றினர்.
தீவிபத்தைத் தொடர்ந்து ஹோட்டல் உள்ள சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
துபாயில் கட்டப்பட்டு வரும் பெரிய கட்டடங்களில் தீவிபத்து தடுப்பு வசதிகள் சரிவர செய்யப்படுவதில்லை என்ற புகார் உள்ளது. கடந்த மாதம் நடந்த ஒரு தீவிபத்தில் பத்து இந்தியர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. துபாயில் இந்த ஆண்டு இதுவரை 12 தீ விபத்துக்கள் நடந்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications