கால்பந்து ரேங்கிங்-151வது இடத்தில் இந்தியா
டெல்லி: சர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டியலில் இந்தியா 2 படி முன்னேறி 151வது இடத்தைப் பிடித்துள்ளது.
சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்கும் கால்பந்து போட்டி இந்தியாவிலும் சற்று பிரபலமாகவே உள்ளது. கிரிக்கெட் பிரபலத்தைத் தாண்டி பல்வேறு விளையாட்டுக்கள் புகழ் பெறத் தொடங்கியுள்ளதைப் போல கால்பந்தும் தற்போது கவனிப்புக்குள்ளாகியுள்ளது.
அதிலும், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை சாலஞ்சர் போட்டியில் இந்தியா சாம்பியன் பெற்றதைத் தொடர்ந்து இந்திய கால்பந்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தற்போது இந்த வெற்றி சர்வதேச கால்பந்துக் கழகத்தின் தரவரிசைப் பட்டியலிலும் எதிரொலித்துள்ளது.
தரவரிசைப் பட்டியலில் இந்தியா இதுவரை 153வது இடத்தில் இருந்து வந்தது. ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து 35 புள்ளிகள் இந்தியாவுக்கு கூடுதலாக கிடைத்து 151வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இப்பட்டியலில் ஸ்பெயினுக்கு (1565 புள்ளிகள்) முதலிடம் கிடைத்துள்ளது. 2வது இடத்தை இத்தாலியும், 3வது இடத்தை ஜெர்மனியும் பெற்றுள்ளன.
பிரேசில் அணிக்கு 6வது இடமே கிடைத்துள்ளது. அதன் பரம வைரியான அர்ஜென்டினா 7வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications