மூடப்பட்ட அமெரிக்கன் கல்லூரி திறப்பு-மரத்தடியில் வகுப்புகள்
மதுரை: கல்லூரி முதல்வர் மாற்றம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து மூடப்பட்ட மதுரை அமெரிக்கன் கல்லூரி இன்று திறக்கப்பட்டது. ஆனால் வகுப்பறைகள் மூடப்பட்டிருந்ததால் மரத்தடியில் பாடம் நடத்தப்பட்டது.
அமெரிக்கன் கல்லூரி முதல்வராக இருந்து வந்த ஜோசப் சின்னராஜ் சமீபத்தில் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில், பிஷப் கிறிஸ்டோபர் ஆசிர், ஜார்ஜ் செல்வக்குமாரை புதிய முதல்வராக அறிவித்தார்.
இதற்கு ஆசிரியர்களில் ஒருதரப்பினரும், மாணவ, மாணவியரும் கடும் எதிர்ப்பு ெதரிவித்தனர். சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பதவியேற்க ஜார்ஜ் செல்வக்குமார் வந்தபோது பெரும் மோதல் வெடித்தது. போலீஸார் தடியடி நடத்தி மாணவ, மாணவியரைக் கலைத்தனர்.
இதையடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ஜார்ஜ் செல்வக்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் இன்று கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் கல்லூரிக்கு வந்தனர். ஆனால் வகுப்பறை எதுவும் திறக்கப்படவில்லை. அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனால் மாணவ, மாணவியர் ஏமாற்றமடைந்தனர்.
இருப்பினும் ஆசிரியர்கள் அவர்களை மரத்தடிகளில் அமர வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தனர்.
முதல்வர் விவகாரம் தொடர்பாக மாணவ, மாணவியர் கவலைப்படாமல், பாடங்களில் கவனம் செலுத்தி தேர்வுகளை சிறப்பாக எழுத வேண்டும் என ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் பதட்டம் நீடிப்பதால் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications