மதுரை: சிபிஎம் கொடி கிழிப்பு-எம்பி மறியல், தடியடி
மதுரை: மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கொடியை கிழித்தவர்களை கைது செய்ய கோரி எம்பி மோகன் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது எதிர்தரப்பினருக்கும் சிபிஎம் கட்சியினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள வ.உ.சி. சிலைக்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்தனர்.
தென்மாவட்ட வ.உ.சி. இளைஞர் பேரவை மதுரை மாவட்ட தலைவரும் மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான ஜி.கணேசன் தலைமையில் ஏராளமானோர் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது சிலைக்கு முன்பு கட்டப்பட்டு இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொடிகளை சிலர் கிழித்து எறிந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த மதுரை சிபிஎம் எம்.பி. மோகன், எம்எல்ஏ நன்மாறன் மற்றும்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
கட்சி கொடியை கிழித்தவர்களை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று எம்பி மோகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையே கணேசனும் அவரது ஆதரவாளர்களும் ஒரு ஆட்டோவில் திரண்டு வந்து எதிர்கோஷம் போட்டனர்.
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. திடீரென்று ஒரு தரப்பினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கொடிக் கம்பங்களை உருவி அடித்தனர்.
நிலைமையை கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் தடியடி நடத்தி, மோதலில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். சிபிஎம் கட்சி கொடியை சேதப்படுத்தியதாக கணேசனை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications