மதுவிலக்கு: ஜனவரியில் போராட்டம்-ராமதாஸ்
திருப்பத்தூர்: தமிழகத்தில் மது விலக்கை அமல்படுத்தவில்லை என்றால் வரும் ஜனவரி மாதம் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்.
வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் திருப்பத்தூர் பழைய பஸ் நிலையத்தில் மது ஒழிப்பு மாநாடு நடந்தது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ராமதாஸ் பேசுகையில்,
டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று அரசு விளக்கம் கொடுக்கிறது. மாற்று மது ஒழிப்பு கொள்கை என்ற திட்டத்தை அரசிடம் கொடுத்துள்ளோம். ஆனால், அதற்கு அரசிடம் இருந்து இதுவரை பதில் இல்லை.
34 ஆண்டுகளாக கள்ளச் சாராயம் இல்லாமல் இருந்தது. எங்களுக்கு இலவசமாக எதுவும் வேண்டாம். மதுவால் எனது கணவர், மகனின் உயிரை பறிக்காதீர்கள் என்று பெண்கள் கூறுகின்றனர். பெண்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், மதுவை ஒழிக்க அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது?
நாங்கள் ஒரேடியாக ஒழிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. 8,000 மதுக்கடைகள் என்பதை 4,000மாக மாற்றுங்கள். தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 வரையிலோ அல்லது மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலோ மதுக்கடைகளை திறந்து கொள்ளுங்கள், சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்களில் மதுக்கடைகளை மூடுங்கள் என்றுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறி வருகிறோம்.
மது ஒழிப்பு கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்று மாநாடுகளை நடத்தி வருகிறோம். இதற்கு கண்டிப்பாக விடிவு காலம் கிடைக்கும். அப்படி எங்களது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் வருகிற ஜனவரி மாதம் கடுமையான போராட்டம் நடத்தப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications