இயற்கை பேரிடரை கண்டறிவிக்கும் செயற்கைகோள்களை ஏவிய சீனா
பெய்ஜிங்: இயற்கை பேரிடர்களை கண்காணித்து எச்சரிக்கும் இரண்டு செயற்கைகோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
சீனாவில் ஷாங்ஸி மாகாணத்தில் உள்ள தையூவான் செயற்கைகோள் ஏவு மையத்தில் இருந்து 2 செயற்கைகோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.
இந்த செயற்கைகோள்கள், வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம், பயிற்களை தாக்கும் தொற்று நோய் உள்பட இயற்கை பேரிடர்களை கண்காணித்து எச்சரிக்கும். இதனால் சுற்றுசூழலை பாதுகாக்க முடியும், சேதங்களை தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த செயற்கைகோள்கள் சுற்றுசூழல் குறித்து கண்காணிக்கும் நமது ஆற்றலை அதிகரிக்கும் என்று சுற்றுசூழல் பாதுகாப்பு இணை அமைச்சர் வூ ஸியோகிங் கூறியுள்ளார்.
சீனாவில் ஆண்டுதோறும் ஏற்படும் சூறாவளி, புயல், வெள்ளம், வறட்சியால் பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த ஆண்டு மட்டும் இயற்கை பேரிடர்களால் சீனாவில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம் சீனாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்மேற்கு சீனாவில் கடந்த மே மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80,000 பேர் உயிரிழந்தனர்.
எனவே இந்த இரண்டு செயற்கைகோள்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 43 செயற்கைகோள்களை சீனா செலுத்தியது என்பது நினைவிருக்கலாம்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications