தேர்தல்: 13ம் தேதி காங். காரிய கமிட்டி கூட்டம்
டெல்லி: அணு சக்தி ஒப்பந்தம் அமலுக்கு வரவுள்ள பின்னணியில், சில மாநில சட்டசபைத் தேர்தல்களை சந்திப்பது குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் சோனியா காந்தி தலைமையில் வருகிற 13ம் தேதி கூடுகிறது.
டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட சில மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல்களை சந்திக்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.
விலைவாசி உயர்வு, அணு ஒப்பந்தம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறின. இதையடுத்து சட்டசபை தேர்தலில் புதிய கூட்டணி அமைக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டிக் கூட்டம் வரும் 13ம் தேதி டெல்லியில் கூடுகிறது. சோனியா காந்தி, பொதுச் செயாலாளர் ராகுல் காந்தி உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
தேர்தல் வியூகங்கள், அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பிரசாரம், அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளின் பிரசாரத்தை சமாளிப்பது, அணு ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் விளக்குவது உள்பட பல விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications