சொந்த உபயோகத்திற்காக விமானம் வாங்கும் ஜெ.?
சென்னை: சொந்த உபயோகத்திற்காக தனி விமானம் ஒன்றை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதாவின் தோழி சசிகலா 2 நாட்களுக்கு முன்பு விமானம் மூலம் சென்னையிலிருந்து கோவைக்கு பயணமானார். அவர் கொடநாடு எஸ்டேட்டுக்கு சென்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சசிகலா நேற்று முன்தினம் இரவு 8.50 மணிக்கு கோவையிலிருந்து சென்னைக்கு திரும்பினார். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர், உடனடியாக மீண்டும் விமான நிலையத்திற்குள் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் விமான நிலையத்திலிருந்த மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் சசிகலா மீண்டும் திரும்பி விமான நிலையத்திற்குள் சென்றதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் குழம்பினர்.
உள்ளே சென்ற சசிகலா, பழைய விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்றில் ஏறியதாக கூறப்படுகிறது. இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை அவர் அந்த விமானத்தில் பறந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த விமானத்தை ஜெயலலிதா வாங்கவுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் சுற்றுப்பயணம் மற்றும் தனிப்பட்ட பயணங்களுக்காக இந்த விமானத்தை ஜெயலலிதா வாங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் இதை அதிமுக வட்டாரங்கள் உறுதிப்படுத்தவில்லை.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications