தூத்துக்குடி இளைஞரின் நூதன சமூக விழிப்புணர்வு பிரசாரம்

தூத்துக்குடி கால்டுவேல் காலனி பகுதியை சேர்ந்தவர் செ.உலகாள்வோன். எம்.ஏ (வரலாறு), எம்.ஏ (நாட்டுபுறவியல்), பி.எட், பி.லிட் ஆகிய பட்டங்களை முடித்துள்ளார்.
இவருக்கு இளமை காலத்திலிருந்தே சாதி, மத பேதமற்ற ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்ற தாகம் ஏற்பட்டது. தன்னுடயை கல்லூரி நாட்களில் தனது குரல் வளத்தின் மூலம் சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துகள் அடங்கிய தெம்மாங்கு பாடல்களை பாடி பலரது பாராட்டையும் பெற்றார்.
இது தவிர விழிப்புணர்வு நாடகம், பல புத்தகங்களையும் அதாவது வானில் பூத்த பூக்கள், தொலைந்து விட்ட காதலி, மகாம் குரல்கள் 1000, வீறிட்டெழும் விதைகள் போன்ற புத்தகங்களை எழுதியுள்ள இவர் நாட்டுபுறபாடல்கள் முலம் பல்வேறு கருத்துகளை பிரச்சாரம் செய்து வரும் உலகாள்வோன் தான் எழுதிய பாடல்களை மட்டுமே பாடுவதை லட்சியமாக கொண்டுள்ளார்.
மேலும் சாதி ஒழிப்பு, வரதட்சனை ஒழிப்பு, கலப்புத் திருமணம், விதவை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு போன்றவற்றை விலியுறுத்தியும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக ஆக்டிவ் சோஷியல் டிரஸ்ட் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார்.
இதன் மூலம் இலவச மருத்துவ முகாம், இலவச செல்போன் பயிற்சி, இலவச பேசிக் எலக்ட்ரானிக்ஸ், இலவச கருத்தமர்வுகள், இலவச வழிகாட்டி வகுப்புகள், இலவச சுயதொழில் பயிற்சி போன்றவை செயல்படுத்தி வருகிறார்.
சத்தம் இல்லாமல் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் உலகாள்வோன் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். 10 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தும் வருகிறார்.
உடல் ஊனமுற்றவர்களுக்காக சிறப்பான சேவை செய்து கடைகள் வைத்து கொடுத்து உதவி புரிகிறார். இலவச திருமணம் நடத்தி வருகிறார். கலப்பு திருமணம் நடத்தி வைக்க எல்லோரும் இவரையே காணச் செல்கின்றனர். இவர் இதுவரை 1000க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நிகழ்த்தி இருக்கிறார்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்புக்காக எழுந்து ஒளி வீசு எனும் குறுந்தகடு தயாரித்து வெளியிட்டுருக்கிறார். உடல் ஊனமுற்ற மாணவர்கள் 45 நபர்களுக்கு சுய தொழில் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
100 இளைஞர்கள் இருந்தால் போதும் இந்த இந்தியாவையே மாற்றிக் காட்டுவேன் என்று இவரை போல இளையோர்களை இனம் கண்டு கொள்ள தேடி வருகிறார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராகப் ஆறு ஆண்டுகள் பணி செய்திருக்கிறார். இவரது வகுப்பறையில் எழுதும் வாசகம் சாதிக்க முடியாததையெல்லாம் சாதிப்பவன் நீ, முடியும் என்பதே உன் அகராதி. இந்த வார்த்தைகள் மூலம் பல்வேறு மாணவர்களின் வாழ்க்கை பாதையை திருப்பியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது லட்சியம் ஏழை, ஊனமுற்றவர்கள், மற்றும் சமுதாயத்தில் பின் தங்கியுள்ளவர்களுக்கு உதவுவது தான் என்கிறார்.
இந்த சாதனை முத்து தூத்துக்குடிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே கிடைத்த அரிய சொத்து என்றார் மிகையில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications