பாஜகவுக்கு வெற்றியை தரும் காங்.: நல்லக்கண்ணு
சிவகாசி: வரும் தேர்தலில் பாஜகவுக்கான வெற்றி வாய்ப்பை, காங்கிரஸ் கட்சியே உருவாக்கி வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
சிவகாசியில் கட்சி வளர்ச்சிக்காக நிதி வசூலிப்பதற்காக வந்த நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் நிலவும் மின் வெட்டால் ஜவுளி, விவசாயம், பட்டாசு தொழில் மற்றும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டால் மக்கள் கொதித்து போய் உள்ளனர். மின் தட்டுப்பாட்டிற்கான காரணம் குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளின் தூண்டுதல் இல்லாமலே மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கி என்ன பயன்?. மளிகை பொருட்களின் விலையை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்வதை மத்திய அரசு பார்த்து கொண்டிருக்கக் கூடாது. கடந்த சில ஆண்டுகளில் தொடர்ச்சியாக 800 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இரண்டு மாதத்திற்கு முன் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 142 டாலராக இருந்தது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தப்பட்டது. இப்போது 116 டாலராக விலை குறைந்துள்ள போதிலும், பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை?.
பாஜக, காங்கிரஸ் கட்சிகளை ஆதரிக்கும் கட்சிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி இல்லை. இந்த இரு கட்சிகளையும் எதிர்க்க கூடிய மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறோம்.
வரும் தேர்தலில் பாஜக, வெற்றி பெறும் வாய்ப்பை, காங்கிரஸ் கட்சியை உருவாக்கி வருகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications