விஜயகாந்த் பண்ணை வாட்ச்மேனுக்கு அரிவாள் வெட்டு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு சொந்தமான பண்ணையின் காவலாளியை அரிவாளால் வெட்டிக் காயப்படுத்திய 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை அருகே உள்ள குன்றத்தூரில் விஜயகாந்துக்கு சொந்தமான பண்ணை உள்ளது. இங்கு போரூரைச் சேர்ந்த மணி (45) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு உதவியாக மகன் அண்ணாதுரை (22) இருந்து வருகிறார்.
நேற்று பிற்பகல் 3 மணியளவில் 5 பேர் பண்ணை வாயில் அருகே உட்கார்ந்து குடித்தனர். இதைப் பார்த்த மணி, இங்கு அமர்ந்து மது அருந்தக் கூடாது. இடத்ைதக் காலி செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அக்கும்பல் மணியுடன் வாக்குவாதத்தில் இறங்கியது.
கொலை செய்துவிடுவோம் என்று மணியை மிரட்டி விட்டு அந்த கும்பல் அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
பிந்னர் இரவு 9.30 மணியளவில் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பண்ணைக்கு வந்து காவலாளி மணியை சரமாரியாக வெட்டினார்கள். இதை தடுக்க முயன்ற மகன் அண்ணாதுரைக்கும் வெட்டு விழுந்தது. பின்னர் அக்கும்பல் ஓடி விட்டது.
காயமடைந்த மணி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மணிக்கு பல இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு 20 தையல்கள் போடப்பட்டுள்ளன. ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.
போலீசார் வழக்குப் பதிவு செய்து மணியை வெட்டிய கும்பலை தேடி வருகிறார்கள்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications