பிரதீபா உத்தரவு-அக்.17ல் கூடுகிறது நாடாளுமன்றம்
டெல்லி: அக்டோபர் 17ம் தேதி நாடாளுமன்ற கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடதுசாரிகள் உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் நேற்று ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை சந்தித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரும், குளிர்காலக் கூட்டத் தொடரும் சேர்த்து ஒன்றாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்தன.
மழைக்காலக் கூட்டத் தொடரை உடனே கூட்ட வலியுறுத்தி இடதுசாரிகளும், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், பார்வர்ட் பிளாக், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற தலைவர்கள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை நேற்று சந்தித்தனர்.
அப்போது அணு ஒப்பந்தம், காஷ்மீர், ஒரிஸ்ஸா கலவரம், பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும். எனவே உடனே நாடாளுமன்றத்தை கூட்ட உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து அக்டோபர் 17ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்டும்படி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டார்.
இதனால் அன்றைய தினம் நாடாளுமன்றம் கூடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 21ம் தேதி இந்தக் கூட்டத் தொடர் முடிவடையும்.












Click it and Unblock the Notifications