ராடார் தளம் அழிப்பு: விமானங்கள் பத்திரமாக திரும்பின-புலிகள்

இதுகுறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது இலங்கை ராணுவத்தின் வன்னித் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இலங்கை விமானப் படையினரின் ராடார் நிலையத்தை குறி வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:05 மணிக்கு கரும்புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் ராடார் நிலையம் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது.
வான் புலிகளுக்கு உதவியாக ராணுவ தலைமையகம் மீது கர்னல் கிட்டு தலைமையிலான படை பீரங்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
வெடிபொருள் இருப்பு வைக்கும் நிலையமும், தொலைத் தொடர்பு கோபுரமும் முற்றிலும் அழிந்து விட்டன. விமான எதிர்ப்பு கருவிகளும் அழிக்கப்பட்டன.
தாக்குதல் நடத்திய வான்புலிகளின் விமானங்கள் பாதுகாப்பாக தளம் திரும்பின.
தரைவழித் தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலிகள் படையைச் சேர்ந்த மதியழகி, ஆனந்தி கனிமதி, முத்துநகை, அறிவுத்தமிழ், வினோதன், நிலாகரன், எழிலகன், அகிலன், நிமலன் ஆகியோர் மரணமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புலிகளின் ஒரு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இலங்கை விமானப் படை கூறியது குறிப்பிடத்தக்கது.
புலிகளின் விமான தாக்குதலில் இந்தியா வழங்கிய ரேடார்கள் சேதமடைந்ததோடு, அதை இயக்கிய 2 இந்தியர்கள் பலத்த காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு கனத்த அமைதி காத்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications