கடத்தல் வழக்கு: இன்ஸ்பெக்டருக்கு கோர்ட் உத்தரவு
மதுரை: கடத்தல் வழக்கில் அரசு வக்கீலுக்கு தகவல் அளிக்காத கரூர் இன்ஸ்பெக்டரை மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஆஜராக நீதிபதி உத்திரவிட்டார்.
நாமக்கல் மாவட்டம், தொண்டிப்பட்டி புதூரை சேர்ந்தவர் கந்தசாமி, துணி வியாபாரி. இவர் கரூரில் உள்ள ஆதிரை பேப்ரிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு துணிகளை விற்பனை செய்தார். இதற்காக அந்த நிறுவனம் கந்தசாமிக்கு ரூ.2 லட்சம் பணம் தர வேண்டியிருந்தது.
இதை கேட்க சென்ற கந்தசாமியின் மகன் சங்கரை ஆதிரை பேப்ரிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர், மற்றும் அங்கு வேலை செய்யும் சுரேஷ், குமார் ஆகியோர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
தனது மகனை கடத்தி வைத்துள்ளதாக ஆதிரை பேப்ரிக்ஸ் நிறுவன உரிமையாளர், ஊழியர்கள் மீது கரூர் காவல் நிலையத்தில் கந்தசாமி புகார் அளித்தார். இந்த புகார் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்தார் கந்தசாமி. இந்த மனு நீதிபதிகள் முருகேசன், சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆஜரான அரசு வக்கில், இந்த மனு கூறித்து கரூர் இன்ஸ்பெக்டருக்கு தகவல் அனுப்பினோம். அவர் இதுவரை எந்தவித பதிலும் தெரிவிக்க முன்வரவில்லை என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கரூர் இன்ஸ்பெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications