ஊழல்-உழைப்பு: அதிமுகவுக்கு விஜய்காந்த் 'டோஸ்'
சென்னை: ஊழல் செய்வதற்குப் பதிலாக உழைத்து சம்பாதித்து கட்சியை வளர்க்க நினைப்பவர்கள், உழைக்கத் தவற மாட்டார்கள் என அதிமுகவுக்கு தேமுதிக தலைவர் விஜய்காந்த் பதிலடி தந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிமுக ஆட்சியில் மின் உற்பத்தி 10,011 மெகாவாட் இருந்தது என்றும், ஜெயலலிதாவின் 10 ஆண்டுகால ஆட்சியில் மூன்றில் ஒரு பங்கான 3,347 மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டது என்றும் அதிமுக தரப்பில் கூறியுள்ளனர்.
தற்போதைய திமுக ஆட்சியில் மின் நிறுவு திறன் 10,122 மெகாவாட். மின்சார உச்ச தேவை 9,567 மெகாவாட். அப்படியிருந்தும் மின் நெருக்கடி ஏன்?.
மின்சாரத்தைப் பொறுத்தவரை, நிறுவு திறன் என்பது வேறு; உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் என்பது வேறு. தற்போதைய மின்சார நிறுவு திறன் 10,122 மெகாவாட். ஆனால், உற்பத்தி வெறும் 6,048 மெகாவாட்.
ஒரு நல்ல அரசு நம்பத்தகுந்த மின் உற்பத்தித் திட்டங்களை அதிகமாக போட வேண்டும். ஆனால், ஜெயலலிதாவும், கருணாநிதியும் மாறி மாறி ஆட்சி செய்த காலத்தில், காற்றாலை மின்சாரத்தை கணக்கிட்டு பெருமை அடித்துக் கொண்டனர்.
இன்றைய தினம் 3,693 மெகாவாட் தனியார் காற்றாலைகளின் நிறுவு திறன் என்றால், அதில் கிடைக்கும் மின்சாரம் வெறும் 70 மெகாவாட் தான்.
எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யாமல், பணம் கிடைக்கிறதே என்ற ஒரே காரணத்திற்காக எதை செய்யக் கூடாதோ அதைச் செய்து, தனியார் காற்றாலைகளை மட்டும் நம்பியதன் விளைவு தான் இன்றைய நெருக்கடிக்கு காரணம்.
சினிமாவில் முழு நேரத்தையும் செலவிட்டு, இடையில் பொழுது போக்கிற்காக அரசியல் நடத்துகிறேன் என்கின்றனர் (அதிமுக மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சொன்னது).
ஊழல் செய்வதற்குப் பதிலாக உழைத்து சம்பாதித்து கட்சியை வளர்க்க நினைப்பவர்கள், உழைக்கத் தவற மாட்டார்கள். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வரும் வரை படங்களில் நடித்துக்கொண்டு தான் இருந்தார். அதே வழியில் தான் நானும் பாடுபடுகிறேன்.
வாய்ப்பு கிடைக்காதவர்கள் அதைக் கண்டு பொறாமைப்படுவானேன், ஆனால் வாய்ப்பு இருக்கிற பொழுது உழைப்பதில் என்ன தவறு?
பொறுப்பற்ற போக்கில் இருப்பதை விட பொறுப்புள்ள ஒரு குடும்பமாக இருப்பது மேல் என்று கருதி பொது வாழ்க்கையில் நான் ஈடுபட்டுள்ளேன். என் மீது புழுதி வாரி தூற்ற நினைப்போர் தங்கள் கைகளை அழுக்காக்கி கொண்டது மட்டுமல்ல, அதே புழுதி தங்கள் மேல் வந்து படியும் என்பதையும் மறந்து விடுகிறார்கள் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications