தமிழகத்துக்கு கூடுதலாக 5000 டன் கோதுமை ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் இந்த மாதம் வழங்குவதற்காக 11,283 டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 5000 டன் கோதுமை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகள் மூலம் இந்த மாதத்திற்கான கோதுமை வழங்க, 3783 டன் என்ற வழக்கமான ஒதுக்கீட்டுடன், 2500 டன் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதன்படி மொத்தம் 8283 டன் கோதுமை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதத்திற்கு மேலும் கூடுதலாக 5000 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இதன்படி மொத்தம் 11,283 டன் கோதுமை செப்டம்பர் 2008 மாதத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை குடும்ப அட்டைதாரர்கள், அவர்களுக்கு இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
கோதுமை பெறுவதில் குறைகள் இருப்பின் சென்னை துணை ஆணையர் (வடக்கு) அல்லது துணை ஆணையர் (தெற்கு), மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது சம்பந்தப்பட்ட உதவி ஆணையரை, வட்ட வழங்கல் அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications