கூட்டணிக்கு அலைகின்றனர்: விஜயகாந்த்
மதுரை: தங்களது கட்சி, ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் கூட்டணிக்கு அலைகின்றனர். ஆனால், வரும் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
மதுரை திருநகரில் அக்கட்சியின் நிர்வாகிகள் இல்லத் திருமணங்களை நடத்தி வைத்து விஜயகாந்த் பேசியதாவது:
ரேஷன் அரிசி கிலோ ஒரு ரூபாய் என்று முதல்வர் அறிவித்துள்ளார். ஆனால் குழம்பு வைக்க 50 ரூபாய் செலவாகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை இல்லை. 80 கோடி ரூபாய் மதிப்புள்ள எனது திருமண மண்டபத்தை இடித்தனர். என் வீட்டில் வருமான வரி சோதனை நடத்துகின்றனர்.
திமுக, அதிமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தினால் அள்ளிக் குவிக்கலாம்.
இலவச டிவி கொடுக்கின்றனர், கேபிள் இணைப்பு கொடுப்பார்களா? மக்களுக்கான நல்ல திட்டங்களை, திமுகவும், அதிமுகவும் செயல்படுத்தி இருந்தால், நான் கட்சி ஆரம்பித்து இருக்க மாட்டேன்.
தமிழக மக்களுக்கு தண்ணீர் தர மறுக்கும் கேரளா, கர்நாடகாவிற்கு நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கொடுக்கின்றனர்.
அனைத்து துறைகளிலும் லஞ்சம் பெருகிவிட்டது.
எங்களுடன் கூட்டணி வைப்பது குறித்து பலரும் பல கருத்துக்களை கூறுகின்றனர். அதை நம்ப வேண்டாம். எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டேன். ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாமல் கூட்டணிக்கு அலைகின்றனர்.
திமுக, அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்த நீங்கள், எங்களுக்கு ஒருமுறை ஓட்டளித்து வாய்ப்பு கொடுங்கள் என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications