500 கி.மீ. ஒற்றைக்காலில் சைக்கிள் ஓட்டி வாலிபர் சாதனை
சென்னை: சிவகங்கையில் இருந்து சென்னை வரை 500 கிலோ மீட்டர் தூரம் ஒற்றைக் காலில் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார் உடல் ஊனமுற்ற வாலிபர்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் போலீஸ் காலனியைச் சேர்ந்தவர் வி.மணிகண்டன் (25). இவர் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் விளையாடியபோது கீழே விழுந்தார். இடது கால் முட்டியில் படுகாயம் ஏற்பட்டதால் தொடைக்கு கீழே எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கால் போனாலும் மணிகண்டனின் நம்பிக்கை போகவில்லை. சாதனை ஒன்றை படைக்காமல் ஓய்வதில்லை என்று உறுதியோடு, சிவகங்கையில் இருந்து சென்னை கோட்டை வரை 500 கிலோ மீட்டர் தூரம் ஒற்றைக்காலில் இரண்டு சக்கர சைக்கிள் ஓட்டி வந்து சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஒன்றாம் தேதி சிவகங்கை அரண்மனை கோட்டை முன்பு மணிகண்டனின் சாதனை முயற்சியை மாவட்ட எஸ்பி கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நண்பர்கள் துணையுடன் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சைக்கிள் பயணத்தை தொடர்ந்தார். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஓய்வு எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் மணிகண்டன் சென்னை வந்து சேர்ந்தார். கோட்டையில் சாதனையை முடித்து முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற திட்டமிருப்பதாக கூறினார்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications