இலங்கையில் காயமடைந்த 2 இந்திய பொறியாளர்கள்-விவரம் வெளியிட்டார் வைகோ

அவர்களது பெயர் ஏ.கே. தாக்கூர், சிந்தாமணி ரவுட் ஆகும்.
கோவையில் நிருபர்களிடம் வைகோ பேசுகையில்,
மன்னிக்க முடியாத குற்றத்தை தமிழர்களுக்கு, மத்திய அரசு செய்து வருகிறது. ஒகேனக்கல், காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்னைகளிலும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இலங்கையில் தமிழர்கள் பசி, பட்டினியில் வாடுகின்றனர். ஆனால், ராணுவ வீரர்கள், ராணுவ தொழில்நுட்ப பொறியாளர்களை மட்டும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இவர்கள், இலங்கை அரசின் கூலிப்படையாக செயல்படுகின்றனர்.
8ம் தேதி, இலங்கை ராணுவத்துக்கு எதிராக விடுதலைப் புலிகள் வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில், இலங்கையின் விமானப் படை ராடார் கருவி பலத்த சேதமுற்றுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ பொறியாளர்கள் ஏ.கே. தாக்கூர், சிந்தாமணி ரவுட் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
இந்திய தூதரகத்தை சேர்ந்த பிரதிநிதி ஒருவர், "இலங்கை ராணுவத்துக்கு உதவியாக இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் பொறியாளர்கள் 265 பேர், இலங்கையில் இருக்கின்றனர்' என கூறியுள்ளார். இது தமிழர்களுக்கு, மத்திய அரசு செய்த துரோகம்.
இதற்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசே முழு காரணம். இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவி செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி, தேவைப்படும் நேரத்தில் போராடுவோம்.
இலங்கைக்கு இந்தியா அளித்து வரும் உதவி பற்றியும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விரிவாக விளக்கி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன் என்றார் வைகோ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications