மதவெறி வீடியோ கேம்: முஸ்லீம்கள் கொந்தளிப்பு
இஸ்லாமாபாத்: அமெரிக்க ராணுவ வீரர், முஸ்லீம்களை படுகொலை செய்வதைப் போன்ற கம்ப்யூட்டர் கேம் பாகிஸ்தானிலும், உலக முஸ்லீம்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லீம் மஸ்ஸாக்கர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோ கேம், ஒரு அமெரிக்கரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. பென்டகன் மற்றும் நியூயார்க் இரட்டை கோபுரம் மீதானதீவிரவாதத் தாக்குதலின் நினைவு நாளையொட்டி இந்த வீடியோ கேம் வெளியிடப்பட்டுள்ளது.
இணையத் தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோடு செய்யும் வகையில் இந்த வீடியோ கேம் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை உருவாக்கிய அமெரிக்கர் தனது பெயர் எரிக் சிக்விடிர் வாக் என தெரிவித்துள்ளார். 22 வயதாகும் இவர் ஆஸ்திரேலியாவில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகில் ஒரு முஸ்லீம் ஆணும், பெண்ணும் உயிருடன் இருக்கக் கூடாது என்பதுதான் இந்த வீடியோ கேமின் குறிக்கோளாம்.
இந்த வீடியோ கேமில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர், மெஷின் கன் மற்றும் ராக்கெட் லாஞ்சருடன் தோன்றுகிறார். பாராசூட் மூலம் மத்திய கிழக்கு பகுதிக்கு இவர் அனுப்பப்படுகிறார்.
அங்கு முஸ்லீம் நாடுகளின் பாரம்பரிய உடையில் பலர் கைகளில் விதம் விதமான துப்பாக்கிகளுடன் காணப்படுகின்றனர். அவர்களை இந்த அமெரிக்க வீரர் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்வது போல கேம் உள்ளது.
இந்த இனவெறி வீடியோ கேமுக்கு உலகெங்கிலிருமிருந்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி முஸ்லீம் அமைப்பான ரமதான் பவுண்டேஷன் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
அதேபோல பாகிஸ்தானிலும் இந்த வீடியோ கேம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் மோசமான ரசனையாகும். இப்படி ஒரு கேமை எந்த நிறுவனம் ஸ்பான்சர் செய்தது என்று தெரியவில்லை என்று சமீர் என்ற பாகிஸ்தானியர் கேட்டுள்ளார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications