திருச்சி சிறையில் எச்ஐவி சோதனை மையம் திறப்பு
திருச்சி: திருச்சி மத்திய சிறையில் எச்.ஐ.வி. பாதிப்பை கண்டறியும் சோதனை மையம் திறக்கபப்ட்டுள்ளது.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் இந்த சோதனை மையத்தை நிர்மானித்துள்ளது. இங்கு எச்.ஐ.வி நோயாளிகளை கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல் சிகிச்சையும் வழங்கப்படும். இந்த மையத்திற்குத் தேவையான கருவிகளை வாங்க எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் ரூ. 66 ஆயிரம் நிதியை வழங்கியுள்ளது.
இந்த மையத்தில் ஒரு ஆலோசகர், ஒரு ஆய்வக உதவயாளர் இருப்பார்கள். தற்போது திருச்சி சிறையில் 14 எச்ஐவி கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு இங்கு சிகிச்சையும் அளிக்கப்படும்.
இவர்களின் உடல் நலம் குறித்து ரெகுலராக கண்காணிக்கப்படும். மேலும் கைதிகளிடையே எச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரமும் மேற்கொள்ளப்படும்.
இதேபோன்ற மையம் ஏற்கனவே சென்னை புழல் மற்றும் பாளையங்கோட்டை சிறைச்சாலைகளில் நிர்மானிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
