மின்வெட்டுக்காக நான் ஏன் பதவி விலக வேண்டும்: ஆற்காடு வீராசாமி

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மின்சார பிரச்சனையைத் தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லாததால் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலர் நானும், முதல்வரும் இந்த பிரச்சனைக்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாட்டில் 30 சதவிகிதம் அளவுக்கு மின்வெட்டு இருந்தது. ஆனால் அப்போதெல்லாம் சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ, முதல்வர்களோ பதவி விலகவில்லை.
அப்போது அவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ஒரு முன் உதாரணத்தை ஏற்படுத்தியிருந்தால் இப்போது எங்களை ராஜினாமா செய்யுமாறு கேட்பதில் நியாயம் இருக்கலாம்.
ஒவ்வொரு பிரச்சனைக்கும் ராஜினாமா தீர்வாகி விட முடியாது. எய்ம்ஸ் மருத்துவமனை பிரச்சனையில் 2 மாதம் போராட்டம் நடைபெற்றது. அப்போது அன்புமணியை ராமதாஸ் ராஜினாமா செய்ய சொன்னாரா? இதேபோல ஜிப்மர் மருத்துவமனை பிரச்சனை தொடர்பாகவும் 3 மாதம் போராட்டம் நடந்தது. அப்போதெல்லாம் நாங்கள் அன்புமணியை ராஜினாமா செய்ய சொல்லவில்லை.
பாஜக ஆளும் கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மின்வெட்டு உள்ளது. ஆனால் அவர்களை எல்லாம் ஏன் இல.கணேசன் ராஜினாமா செய்ய சொல்லவில்லை, எங்களை மட்டும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுவது என்ன நியாயம்?
தொழிலதிபர்களுடன் ஆலோசனை கூட்டம்:
தலைமை செயலகத்தில் இன்று தொழிலதிபர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தொழிலதிபர்கள் தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக சீராக மின்சாரம் இருப்பதாகவும், இந்தநிலை நீடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
தொழிலதிபர்கள் 3000 மெகாவாட் அளவிற்கு ஜெனரேட்டர் மூலம் மின் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இதற்கு தேவையான எரிபொருளுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
இதுபற்றி மீண்டும் திங்கட்கிழமை அவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அவர்கள் எவ்வளவு அளவிற்கு மானியம் கேட்கிறார்கள், அதற்கு அரசால் எவ்வளவு கொடுக்க முடியும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications