பாமகவின் தமிழோசை நாளிதழுக்கு விளம்பரம் நிறுத்தப்படவில்லை: அரசு
சென்னை: முன்பு போலவே அரசு விளம்பரங்களை தொடர்ந்து வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தமிழோசை நாளிதழ் தொடர்ந்த வழக்கை பைசல் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பாமகவின் சார்பில் நடத்தப்பட்டு வரும் நாளிதழ் தமிழோசை. இந்த நாளிதழ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழோசை சார்பில் அதன் பதிப்பாளரும், பாமக தலைவருமான ஜி.கே.மணி தாக்கல் செய்திருந்த மனுவில், திமுக பாமகவுனான உறவை முறித்துக் கொண்ட பின்னர், ஜூன் 15ம் தேதி முதல் தமிழோசை நாளிதழுக்கு தரப்பட்டு வந்த அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டு விட்டது.
எனவே முன்பு போலவே தமிழோசை நாளிதழுக்கு அரசு விளம்பரங்களை தர உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவுக்கு அரசு சார்பில்அளிக்கப்பட்ட பதிலில், இன்று வரை தமிழோசை நாளிதழுக்கு வழக்கம் போலவே விளம்பரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எந்த காரணத்தைக் கொண்டும் விளம்பரங்கள் நிறுத்தப்படவில்லை. இதுதொடர்பாக தமிழோசை கூறும் வாதம் தவறானது என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால் வசந்தகுமார், அரசின் வாதத்தை பதிவு செய்து கொள்வதாக கூறி வழக்கை பைசல் செய்து உத்தரவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications