சியாச்சின், சர் கிரீக் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு: சர்தாரி
இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான சியாச்சின், சர் கிரீக் எல்லை பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் பனி மலைச் சிகரம் சியாச்சன். உலகின் மிக உயரமான போர்க்களம் என்ற பெயரும் இதற்கு உண்டு. இது யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே சர்ச்சை நிலவுகிறது.
சியாச்சின் மலைத் தொடர் பகுதியில் இரு நாடுகளும் வீரர்களைக் குவித்துள்ளன. இறுப்பினும் இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. சியாச்சின் மற்றும் சர் கிரீக் எல்லை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சர்தாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சியாச்சின், சர் கிரீக் தொடர்பான எல்லை பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும். அதேபால நீண்டகாலமாக உள்ள காஷ்மீர் பிரச்சனையும் தீர்க்கப்பட்டு இருநாடுகளிடையே சுமூக சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இந்தியாவுடனான பிரச்சனைகளை தீர்வுகாண்பது தொடர்பாக ரகசிய செயல்பாடுகளில் எனது அரசுக்கு உடன்பாடில்லை.
சியாச்சின், சர் கிரீக் பிரச்சனைகள் தீர்வு காணப்பட்டால், அடுத்த கட்டமாக காஷ்மீர் பிரச்சனைக்கும் முடிவு காண நம்பகமான சூழல் ஏற்படும்.
காஷ்மீர் பிரச்சனைக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படும். பின்னர் இறுதி தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்றார்.
சர் கிரீக் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பொது கருத்து உருவாகியுள்ளது. அதேசமயம், சியாச்சின் பிரச்சினையில், இரு நாட்டு ராணுவ வீரர்களின் நிலைகள் குறித்த பிரச்சினைக்கு உடன்பாடு இதுவரை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications