ஆந்திரா- கால்சென்டர்களில் காண்டம் மெஷின்!!
ஹைதராபாத்: எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் நோய் பரவலைத் தடுக்க ஆந்திர கால் சென்டர்களில் காண்டம் (ஆணுறை) விற்கும் தானியங்கி மிஷின்கள் நிறுவப்படவுள்ளன.
முதல் கட்டமாக ஹைதராபாத்தின் முக்கிய கால்சென்டர்கள் அனைத்திலும் இந்த மெஷின்களை நிறுவன ஆந்திரப் பிரதேச எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட கால்சென்டர் நிறுவன உரிமையாளர்கள் அனைவரிடமும் இதுகுறித்துப் பேசப்பட்டு விட்டதாகவும், அவர்கள் ஒப்புதலுடன் இன்னும் சில தினங்களில் இந்த மெஷின்கள் நிறுவப்படும் என்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழக இயக்குநர் சந்திரவதன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தின் கால்சென்டர்களில் மொத்தம் 1 லட்சம் ஆண், பெண்கள் பணியில் உள்ளனர்.
அரசு அலுவலகங்களிலும்...
மேலும் ஆந்திர மாநில தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும் அந்த காண்டம் விற்பனை மெஷின்களை நிறுவ அனுமதி கேட்டுள்ளது எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகம்.
மேலும் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் ஆண்டில் 16 மணி நேரங்கள் செக்ஸ் கல்வி போதிக்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், இதற்காக சத்யம் கம்ப்யூட்டர்ஸ் உதவியுடன் ஒரு தனிப் பாடத்திட்டம் மற்றும் கல்வி உபகரணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் சந்திரவதன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுமுதல் 16500 பள்ளிகள் மற்றும் 950 கல்லூரிகளில் இந்தத் திட்டத்தைத் தொடங்க உள்ளார்களாம்.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி












Click it and Unblock the Notifications