கட்சி கூட்டத்திற்கு சிவராஜ் பாட்டீலுக்கு அழைப்பில்லை - கல்தா?
{image-shivaraj patil250_15092008.jpg tamil.oneindia.com}டெல்லி: டெல்லி தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி கூட்டிய அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அழைக்கப்படவில்லை. இதனால் அவரது பதவி பறிக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் பெரும் நாச வேலையில் ஈடுபட தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக பத்து நாட்களுக்கு முன்பே பிரதமர், உள்துறை அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கு ஆதாரங்களுடன் எச்சரிக்கை விடுத்தேன். ஆனால் அவர்கள் அலட்சியமாக இருந்து விட்டனர் என்றுகுஜராத் முதல்வர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியிருந்தார்.
மோடியின் எச்சரிக்கையை பிரதமரும், மத்திய அரசும் அலட்சியப்படுத்தியதால்தான் டெல்லியில் இன்று குண்டுவெடிப்பு நடந்து விட்டது என்று பாஜக மூத்த தலைவர் அத்வானியும் குற்றம் சாட்டியிருந்தார்.
சபாரியில்தான் பாட்டீலுக்கு நாட்டம் - மோடி
மேலும் சிவராஜ் பாட்டீலின் செயல்பாடுகளையும் மோடி கடுமையாக விமர்சித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், சிவராஜ் பாட்டீல் விதம் விதமாக சபாரி அணிவதில்தான் அவர் அதிக நாட்டம் செலுத்துகிறார்.
டெல்லி குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஒருசபாரி அணிந்திருந்தார். அடுத்த சில நிமிடங்களில் குண்டுவெடிப்பு நடந்த சென்ட்ரல் பார்க் பகுதிக்கு வந்தபோது மடிப்பே இல்லாத சபாரியுடன் கல்யாண வீட்டிற்கு வருவது போல வந்திருந்தார். இவர் உள்துறை அமைச்சராக இருக்கவே லாயக்கற்றவர். குண்டுவெடிப்பு குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் எப்படித்தான் இவரால் சபாரியை மாற்ற நேரம் இருந்ததோ என தனக்கு நெருக்கமானவர்களிடம் மோடி கோபமாக கூறியதாக கூறப்படுகிறது.
இதே கோபம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கும் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. உளவுத்துறையை சரியாக கையாளத் தவறியதே இந்த குண்டுவெடிப்புக்கு முக்கிய காரணம் என்று காங்கிரஸ் தலைமை கருதுகிறது.
மேலும், ஜெய்ப்பூரில் ஆரம்பித்து பெங்களூர், அகமதாபாத், சூரத் என குண்டுவெடிப்புகள் தொடர் கதையாகி விட்டதும் காங்கிரஸ் கட்சிக்கு பாட்டீல் மீதான அதிருப்தியை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு குறித்து அவசர ஆலோனைக் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா இன்று கூட்டினார். இந்த கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
கட்சியின் முக்கிய தலைவர்களான மத்திய அமைச்சர்கள் அந்தோணி, பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மார்கரட் ஆல்வா, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல், ஜனார்த்தன் துவிவேதி, வீரப்ப மொய்லி, திக் விஜய் சிங் ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு, கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
வெடிகுண்டு தாக்குதலை அடுத்து நாட்டு மக்களின் மனநிலை குறித்தும், இதைத் தொடர்ந்து வரும் தேர்தலை சந்திப்பது குறித்தும் சோனியா விவாதித்ததாக கூறப்படுகிறது.
தீவிரவாத தாக்குதல் மற்றும் அமர்நாத் நில விவகாரம் போன்ற பாதுகாப்பு விவகாரங்களில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் சரியான முறையில் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் குறித்து விவாதிக்கப்படுவதாக தெரிகிறது. இதனால் அவரை கட்சியில் பாதுகாக்க காங்கிரஸ் விரும்பவில்லை. அவர் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், இந்த தாக்குதல் தொடர்பாக உள்துறையை மட்டும் குற்றம்சாட்டுவது நியாயமல்ல. உளவுத் துறை முழுமையான தகவலை தரவில்லை. இதில் உளவுத் துறையும் போலீஸாரும் பொறுப்புள்ளவர்கள். பொடா சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் மட்டுமே தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியாது என்றார் அவர்.
தீவிரவாதம் குறித்து விவாதிக்க உயர்மட்டக் குழு மற்றும் அமைச்சரவையை கூட்ட வேண்டும் என்று பிரதமர் மற்றும் சோனியாவை கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்?












Click it and Unblock the Notifications