தனி தெலுங்கானா: விஜயசாந்தியுடன் டிஆர்எஸ் கூட்டணி
ஹைதராபாத்: சிரஞ்சீவி அலையை எப்படி சமாளிப்பது என்ற கவலையில் காங்கிரஸும், தெலுங்குதேசமும் ஆழ்ந்துள்ள நிலையில், தெலுங்கானா பகுதியில் வாக்குகளை தக்க வைக்க விஜயசாந்தியுடன் இணைந்து செயல்பட தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸ், தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, விஜயசாந்தி, பாஜக என இருந்து வந்த ஆந்திர அரசியல் சூழல் தற்போது சிரஞ்சீவியின் வருகையால் கலகலத்துப் போயுள்ளது.
சிரஞ்சீவியை சமாளிக்கும் வழிகள் குறித்து காங்கிரஸ், தெலுங்குதேசம் ஆகியவை தீவிரமாக சிந்தித்து வருகின்றன. இந்த நிலையில், தெலுங்கானா பகுதியில் தங்களது நிலையை ஸ்திரமாக்கும் முயற்சியில் தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சி இறங்கியுள்ளது. அதன் முக்கிய முயற்சியாக விஜயசாந்தியுடன் இணைந்து செயல்பட அக்கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் தீர்மானித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயசாந்தியை, சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார். அப்போது தெலுங்கானா தனி மாநிலம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து அவர் விஜயசாந்தியுடன் ஆலோசித்தார்.
விஜயசாந்தி தெலுங்கானாவைக் குறி வைத்து தல்லி தெலுங்கானா என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஆனால் இதுவரை அவர் ஒரு அரசியல் சக்தியாக உருப் பெறவில்லை. அதேபோலஆரம்பத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய சந்திரசேகர ராவின் செல்வாக்கு இப்போது பெருமளவில் மங்கி விட்டது.
இந்த நிலையில் இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது தெலுங்கானா பகுதி அரசியல் சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.
தனது யோசனைக்கு விஜயசாந்தி ஆதரவுதெரிவித்துள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் இதுகுறித்து அவர் அறிக்ைக வெளியிடுவார் எனவும் ராவ் தெரிவித்தார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications