சேலம்: 27ல் பாஜக மாநில பொதுக்குழுக் கூட்டம்
சென்னை: பாஜகவின் மாநில பொதுக்குழுக் கூட்டம், வரும் 27ம் தேதி சேலத்தில் நடக்கிறது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்.
இதுகுறித்து பாஜக வெளியிட்டுள்ள அறிக்கை:
சேலத்தில் 26ம் தேதி கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து அன்றைய தினமே மாநில செயற்குழுக் கூட்டமும் நடக்கிறது. அடுத்த நாள் பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் இல.கணேசன் தலைமை வகிக்கிறார். தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங், இணை அமைப்பு பொதுச் செயலர் சதீஷ், தமிழகப் பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத், தேசியச் செயலர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கட்சியின் ஒன்றிய மற்றும் நகராட்சித் தலைவர்கள், அதற்கு மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் தயாரிப்பு குறித்து கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications