இலங்கைக்கு ரேடார் வழங்கவில்லை-காங்கிரஸ்
சென்னை: இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் எதையும் வழங்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சாதனை படைத்தது. இந்த ஒதுக்கீட்டை நிறைவேற்றும் போது காலியாக இருக்கும் இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவும் தேவையான சட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் பிரதமருக்கும், சோனியா காந்திக்கும் கடிதம் எழுதியுள்ளேன்.
பரமத்திவேலுரில் கிறிஸ்தவ தேவாலயம் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாஜகவும் கட்சியும் அதன் தோழமை கட்சிகளும் மதக் கலவரத்தை ஏற்படுத்தும் திட்டத்தோடு சிறுபான்மையினருக்கு எதிரான செயல்பாடுகளிலும் இறங்கியுள்ளன. சிறுபான்மையினர் தாக்கப்படுவதை காங்கிரஸ் வேடிக்கை பார்க்காது.
கூட்டணி, ஆட்சியில் பங்கு போன்ற கொள்கை முடிவுகளை சோனியாதான் முடிவு செய்வார்.
இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் செயற்குழுவில் பேசும்போது தெரிவித்தேன். எனது கோரிக்கையை ஏற்று இலங்கை அரசுடன் ராணுவ மத்திரி ஏ.கே.அந்தோணி பேசி தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் வழங்குவதாக பொய்யான குற்றச்சாட்டை (!) சொல்கிறார்கள். மத்திய அரசு ஆயுதம் எதுவும் வழங்கவில்லை (!!).
சோனியா காந்தியின் அறிவுரைப்படி தகுதி அடிப்படையில் மட்டுமே கட்சிக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். கோஷ்டி அடிப்படையில் பதவிகள் வழங்கப்பட மாட்டாது என்றார் தங்கபாலு.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications