கச்சத்தீவு-இந்தியாவிடம் ஒப்படைக்க இலங்கை எம்.பி கோரிக்கை
சென்னை: கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் ேசர்ந்த எம்.பி. சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் தமிழகத்தின் கோரிக்கைக்கு இலங்கை தமிழ் எம்.பி. சிவாஜிலிங்கம் ஆதரவு ெதரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கச்சத்தீவை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்கும் நிலைமைக்கு முடிவு ஏற்படும்.
தமிழகத்திலிருந்து இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நாங்கள் முழு ஆதரவு தருகிறோம். இருப்பினும் இதற்கு மேல் எங்களால் எதுவும் செய்ய முடியாத நிலை உள்ளது.
இருப்பினும் கச்சத்தீவை இந்தியா திரும்பப் பெற்றால், இலங்கைத் தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.
தமிழக மீனவர்களை விடுதலைப் புலிகள் தாக்குவதாகவும், பிடித்துச் செல்வதாகவும் கூறப்படும் புகாரில் சற்றும் உண்மை இல்லை.
இலங்கையில் தற்போது ராஜபக்சே அரசு இனப் படுகொலையில் இறங்கியுள்ளது. இந்த எண்ணத்தோடுதான் இலங்கை ராணுவம் தற்போது தமிழர் பகுதிகளில் படுகொலைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கையில் தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்க இலங்கை முயலுகிறது. அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் குறி வைத்து தாக்கி அழித்து வருகிறது.
இளைஞர்கள் ராணுவத்தால் துன்புறுத்தப்படுகின்றனர். பெண்கள் கற்பழிப்பு கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், இலங்கை ராணுவத்தின் கொடூரத் தாக்குதலுக்கு இந்தியா எந்த வகையிலான ஆதரவையும் தரக் கூடாது. இலங்கைக்கு ராணுவ ரீதியிலான உதவிகளையும் இந்தியா நிறுத்த வேண்டும்.
2 லட்சம் தமிழர்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடங்களில் அடிப்படை வசதிகள், குடிநீர் உள்ளிட்டவை இல்ைல என்றார் சிவாஜி லிங்கம்.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications