'ஹை வோல்டேஜ்'-ராஜபாளையத்தில் மின் சாதனங்கள் காலி
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அதிக அளவு மின் அழுத்தம் பாய்ந்ததால் வீடுகளில் இருந்த டிவி, ரேடியோ உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் வெடித்து சிதறின.
விருதுநகர் மாவட்டம், அம்மாபட்டியில் இருந்த டிரான்ஸ்பமரில் உயர் மின் அழுத்த வயர்கள் முறையாக இணைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பகுதிகளில் காற்று பலமாக வீசியபோது, வயர்களில் உராய்வு ஏற்பட்டது.
இதனால் வீடுகளுக்கான மின் இணைப்பில் கூடுதல் மின்சாரம் பாய்ந்தது. ராஜபாளையம், கல்லுப்பட்டி, அம்மாபட்டி போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளி இதில் பாதிக்கப்பட்டன.
வீடுகளில் இருந்த டிவி, ரேடியோ, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்கள் அதிக மின் அழுத்தம் காரணமாக வெடித்து சிதறியன. இதனால் ஆவேசமடைந்த மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்தனர்.
இதையடுத்து அதிகாரிகள் இந்த பகுதிகளுக்கு சென்று மின் அழுத்தம் குறித்து ஆய்வு செய்தனர்.












Click it and Unblock the Notifications