உலக நிதி நிலை-அமைச்சர்களுடன் பிரதமர் ஆய்வு

லேமென் பிரதர்ஸ் வங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து உலக பொருளாதாரம் ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. மேலும் பல நிறுவனங்கள் திவாலாகலாம் என்ற பயம் கலந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஆனால் இந்திய வங்கிகளுக்கு அப்படி ஒரு ஆபத்து இல்லை. எந்த நிலையையும் சமாளிக்கும் வகையில் அவை ஸ்திரமாக உள்ளதாக நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதனால் பங்குச் சந்தையில் கடந்த ஓரிரு நாட்களாக நிலவி வந்த சரிவு தற்போது சரியாகத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் மன்மோகன் சிங் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். உலகப் பொருளாதார நிலை, இந்தியப் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் நடந்த விவாதம் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ரகுவன்ஸ் பிரசாத் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது உலகப் பொருளாதார நிலையால், இந்திய பொருளாதாரத்தில் சீர்குலைவு ஏற்படாது என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். அதேசமயம், உலக பொருளாதார நிலையை கூர்ந்து கவனித்து வர வேண்டும் எனவும் கேபினட் அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு பொருளாதார நெருக்கடி குறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் விரிவாக விளக்கினார். அப்போது, அமெரிக்க நிதி நெருக்கடியால் இந்திய பொருளாதாரத்திற்கு எந்தப் பாதிப்பும் வராது என்று தெளிவுபடுத்தினார் என்றார் பிரசாத் சிங்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications