விழுப்புரம் தவெக பரபரப்பு.. முதலமைச்சர் விஜய் மீது வழக்கு தொடர்ந்த பெண் நிர்வாகி நீக்கம்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் தவெக பெண் நிர்வாகி நீக்கப்பட்டுள்ளார்.. இதுகுறித்து விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கட்சியின் கொள்கைகளுக்கும் கட்டுப்பாடுக்கும் முரணாக செயல்பட்டதால் ஞானசவுந்தரி தவெகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.. சொந்த கட்சியினர் என்றாலும், தவறு செய்தது நிரூபணமானால், அவர்களை உடனடியாக கட்சியிலிருந்து தவெக மேலிடம் நீக்கம் செய்து வருவது அனைவரின் கவனத்தையும் பெற்று வருகிறது.

விழுப்புரம் அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட சம்பவம், அரசியல் களத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Villupuram TVK CM Vijay Woman Leader High Court Case

விழுப்புரம் ஞானசவுந்தரி

அரசு வழக்கறிஞர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சொல்லி, தவெகவின் விழுப்புரம் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளரான ஞானசவுந்தரி என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். தன் கட்சியின் தலைமை மீதே நீதிமன்றம் சென்ற ஞானசவுந்தரியின் இந்த நடவடிக்கை, அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஹைகோர்ட், அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பான இந்த வழக்கில் இருந்து முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் பெயர்களை நீக்க உத்தரவிட்டது. இருந்தாலும் கட்சியின் தலைமை மீதும், அரசுப் பதவிகள் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் வரை கொண்டு சென்றது அந்த கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

மோகன்ராஜ் அறிவிப்பு

இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி ஞானசவுந்தரி மீது த.வெ.க. தலைமை தற்போது மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கட்சியின் கொள்கைகளுக்கும் கட்டுப்பாடுக்கும் முரணாகச் செயல்பட்டதால் ஞானசவுந்தரி தவெகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ் வெளியிட்டுள்ள அந்த அதிகாரப்பூர்வ அறிக்கை இதோ

தவெகவில் இருந்து நீக்கம்

"தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக இணையவழி (Online) முறையின் மூலமாக உறுப்பினராக இணைந்துள்ள சந்திரமோகன் மனைவி திருமதி M. ஞானசவுந்தரி, MS.No.4063/2015 அவர்கள் எதிரிகளுடன் சேர்ந்துகொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட அவரை தமிழக வெற்றிக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்.

மேலும் கட்சியின் எந்த நிர்வாகியும் அல்லது உறுப்பினரும் கட்சி சார்பில் இன்றிலிருந்து அவருடன் எந்தவித கட்சி தொடர்போ, ஒத்துழைப்போ வைத்துக்கொள்ள கூடாது என அறிவுறுத்தப்படுகிறது." என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

சொந்த கட்சியினர் என்றாலும், பாயும் ஆக்‌ஷன்

சமீபகாலமாகவே தவெகவில் அரங்கேறி வரும் ஒழுங்கு நடவடிக்கைகள், அரசியல் வட்டாரத்திலும் அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. காரணம், கட்சியின் கொள்கைகளுக்கும் கட்டுப்பாடுக்கும் முரணாக செயல்படும் நபர்கள் மீது தவெக மேலிடம் பாரபட்சமின்றி ஆக்‌ஷன்களை எடுத்து வருகிறது.

கடந்த வாரம், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதாக சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.. இதனால் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளரும் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருமான வீராசாமி மீது தற்காலிக நீக்க நடவடிக்கை பாய்ந்தது. கட்சியின் புகழுக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் தினகரன் அவரை உடனடியாகக் கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.

இந்த லஞ்ச விவகார அதிர்வலைகள் அடங்குவதற்குள், இப்போது அடுத்த அதிரடியாக கோர்ட் வரை சென்ற ஞானசவுந்தரி மீதும் தவெக தலைமை ஆக்‌ஷன் எடுத்துள்ளது. இப்படி அடுத்தடுத்து சொந்தக் கட்சி நிர்வாகிகளையே த.வெ.க தலைமை கட்டம்கட்டித் தூக்கி வருவது, கட்சி கட்டுப்பாட்டில் தலைமை எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+