அரிசி கடத்தல்.. அமைச்சர் பேச்சு: ஜெ. விளாசல்
சென்னை: அரிசிக் கடத்தலையும் மனதில் வைத்துத்தான் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தை திமுக அரசு தீட்டியுள்ளது என்று பேசியுள்ள அமைச்சர் டி.பி.எம். மைதீன் கான் மீது முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுப்பாரா என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேட்டுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநெல்வேலியில் நடந்த ஓர் அரசு விழாவில், அமைச்சர் மைதீன்கான் பேசுகையில், அரிசி கடத்தலுக்கும் சேர்த்து கணக்கு பார்த்து தான் இந்தத் திட்டத்தை கொண்டுவந்து இருக்கிறோம். கடத்தல் தவிர்க்க முடியாது என்று தெரிவித்து இருக்கிறார்.
தமிழகத்தில் திமுகவினரால் அரிசிக் கடத்தல் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது என்பதற்கு அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
அரிசிக் கடத்தலை ஆதரித்து பேசிய அமைச்சரின் மீது கருணாநிதி நடவடிக்கை எடுப்பாரா?
மணல், சர்க்கரை, அரிசி போன்ற பொருட்களை கடத்தியது போதாது என்று தற்போது மளிகைப் பொருட்களையும் திமுகவினர் கடத்துவதற்கு கருணாநிதி வழி செய்து கொடுத்திருக்கிறார். இது ஓர் ஏமாற்று திட்டம். மக்கள் இந்த கபட நாடகத்தை நம்பத் தயாராக இல்லை.
கடுமையான விலைவாசி உயர்வு, மின்வெட்டு, பொருளாதார நெருக்கடி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அமைச்சர்களாலேயே மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து போன்ற அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications