துபாய் பஸ்சில் தீ-அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்
துபாய்: துபாய் நகரின் பர்ஜ் துபாயில் பகுதியில், பஸ்சில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. டிரைவர் சாதுரியமாக செயல்பட்டதால் பஸ்சில் உள்ள அனைத்து பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
துபாயின் முக்கிய வணிகப் பகுதியான பர்ஜ் துபாயின் பிரதான சாலையான காலித் பின் வாலித் சாலையில் வியாழன் நண்பகல் 50 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிந்தது.
வாகனத்தின் ஏதோ ஒரு பகுதியில் புகை வருவதை உணர்ந்த ஓட்டுநர் ஏதோ அசாம்பாவிதம் நேரப்போகிறது என்பதனை உணர்ந்து உடனடியாக பயணிகளை பேருந்தை விட்டு இறங்குமாறு எச்சரித்தார். பயணிகள் இறங்கியதும் ஓட்டுநரும் பேருந்தை விட்டுக் குதித்தார்.
அதனைத் தொடர்ந்து தீ மளமளவென எரிந்து பேருந்தை தீக்கிரையாக்கியது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயினை அணைத்தனர். இவ்விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டதுடன், தங்களது இன்னுயிரைக் காத்த ஓட்டுநரைப் பாராட்டினர்.
தீவிபத்துக்குக் காரணம் மின்கசிவு என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குளிர்சாதனத்தில் ஏற்பட்ட கோளாறே தீ விபத்துக்குக் காரணம் என ஓட்டுநர் தெரிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications