மதுரை மாநகராட்சி இடை தேர்தல் முடிவு-அறிவிக்க தடை
மதுரை: மதுரை மாநகராட்சியின் 52வது வார்டுக்கு நடந்த இடைத் தேர்தல் முடிவுகளை வெளியிட மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சென்னையில் 2 மாநகராட்சி வார்டுகள், மதுரையில், 52வது வார்டு ஆகியவை உள்ளிட்ட உள்ளாட்சி காலியிடங்களுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது.
இதில் மதுரையில் பெரும் மோதல் மூண்டது. பெருமளவில் கள்ளஓட்டுக்கள் போடப்பட்டதாக அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றம் சாட்டின. திமுகவினர் நடத்திய தாக்குதலில் சிபிஎம் தொண்டர் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
சென்னையிலும், திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாக சர்ச்சை எழுந்தது. திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே மோதலும் மூண்டது.
இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்றக்கிளையில், 52-வது வார்டு இடைத் தேர்தலில் திமுக வினர் வன்முறையை கட்ட விழ்த்து விட்டது தொடர்பாக அதிமுக வேட்பாளர் வி.மலைச்சாமி மனுத்தாக்கல் செய்தார்.
இம்மனு உயர்நீதிமன்ற மூன்றாவது நீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.முருகேசன், பி.முருகேசன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தேர்தல் நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் நீதிமன்றம் தலை யிட முடியாது. இருந்தாலும் மனுதாரரின் அவசரத்தை கருத்தில் கொண்டு வாக்கு எண்ணிக்கையை நடத்தலாம்.
ஆனால், மறு உத்தரவு வரும் வரை வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தர விட்டனர்.
வழக்கு விசாரணையை வருகிற செப்-23ந்தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக அரசு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications