அரிசி-திரித்துக் கூறும் ஜெ: அமைச்சர் தாக்கு
சென்னை: தமிழ்நாட்டில் அரிசி கடத்தலுக்கு ஆதரவாக நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக ஜெயலலிதா கூறியிருப்பது முற்றிலும் தவறானது, எனது பேச்சை ஜெயலலிதா திரித்துக் கூறியுள்ளார் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மைதீன்கான் கூறியுள்ளார்.
இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையி்ல்,
திருநெல்வேலியில் நடந்த ஓர் அரசு விழாவில், அமைச்சர் மைதீன்கான் பேசுகையில், அரிசி கடத்தலுக்கும் சேர்த்து கணக்கு பார்த்து தான் இந்தத் திட்டத்தை கொண்டுவந்து இருக்கிறோம். கடத்தல் தவிர்க்க முடியாது என்று தெரிவித்து இருக்கிறார் என்று கூறியிருந்தார்.
இதை மறுத்து இன்று மைதீன் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 16ம் தேதி நெல்லையில் நடந்த ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் விழாவில் நான் பேசியது பற்றிய செய்தி 17ம் தேதி நெல்லையில் அனைத்து பத்திரிகைகள் மற்றும் தொலைக் காட்சிகளிலும் வெளிவந்துள்ளது.
ஆனால் 3 நாட்கள் கழித்து 18ம் தேதி என்னுடைய பேச்சு குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் அரிசி கடத்தலுக்கு ஆதரவாக நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் தவறு.
உலகத்திலேயே ரூ.1க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவது தமிழகத்தில் அமைந்துள்ள கருணாநிதி அரசுதான். நல்ல பல இலவச திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருவதை அரசியலில் சகித்துக் கொள்ள முடியாத ஜெயலலிதா குறை கூறிக்கொண்டு தினம் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார்.
எந்த சராசரி மனிதரும் இந்த அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கும் பல நல்ல திட்டங்களை ஆதரிப்பார்களே தவிர, கடத்தலை ஆதரிக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.
எனவே நான் பேசிய கருத்து ஜெயலலிதாவால் திரித்துக் கூறப்பட்டுள்ளது. திசை திருப்பும் நோக்கத்தில் என்மீது வீண்பழி சுமத்த நினைப்பது தேவையற்ற ஒன்று.
தமிழகத்தில் ரூ.1க்கு 1 கிலோ அரிசி வழங்குவதை தடுக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications