அரிசி கடத்தலை அரசு அனுமதிக்காது: ஜெ. புகாருக்கு அமைச்சர் மறுப்பு
சென்னை: முதல்வர் கருணாநிதி தலைமையிலான அரசு, அரிசி கடத்தலை ஒரு போதும் அனுமதிக்காது. யாராயிருந்தாலும் தண்டித்தே தீரும். திசை திருப்பும் நோக்கத்தில் என் மீது வீண்பழி சுமத்த நினைப்பது தேவையற்றது என்று கூறியுள்ளார் இளைஞர் நலத்துறை அமைச்சர் மைதீன் கான்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 16ம் தேதி நெல்லையில் நடந்த ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டத்தை வழங்கும் விழாவில் நான் பேசியது குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அரிசி கடத்தலுக்கு ஆதரவாக நான் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாக கூறியுள்ளார். இது முற்றிலும் தவறானது.
உலகத்திலேயே ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி வழங்குவது கருணாநிதி அரசுதான் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தவிர இலவச டிவி, காஸ் இணைப்புடன் கூடிய அடுப்பு, பள்ளிகளில் வாரத்துக்கு 3 முட்டைகள் போன்ற நல்ல பல இலவச திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருவதை அரசியலில் சகித்துக் கொள்ள முடியாத ஜெயலலிதா, அரசை குறை கூறி கொண்டு தினம் ஒரு அறிக்கையை வெளியிடுகிறார்.
இந்த அரசு செயல்படுத்திக் கொண்டு இருக்கும் பல நல்ல திட்டங்களை குறிப்பாக ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி வழங்குவதை எந்த சராசரி மனிதரும் ஆதரிப்பார்களே தவிர, கடத்தலை ஆதரிக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.
நான் பேசியதன் கருத்து ஜெயலலிதாவால் திரித்துக் கூறப்பட்டுள்ளது. கருணாநிதியில் தலைமையில் உள்ள இந்த அரசு கடத்தலை ஒருபோதும் அனுமதிக்காது. யாராயிருந்தாலும் தண்டித்தே தீரும். திசை திருப்பும் நோக்கத்தில் என் மீது வீண்பழி சுமத்த நினைப்பது தேவையற்ற ஒன்று.
ஒரு ரூபாய்க்கு கிலோ அரிசி திட்டத்தை தடுக்க நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக












Click it and Unblock the Notifications