தமிழகத்தில் தொடரும் சாதி கொடுமை: சிபிஎம்
மன்னார்குடி: தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னமும் சாதி கொடுமைகள் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.வரதராஜன் கூறினார்.
பி.இராமமூர்த்தி நூற்றாண்டு நிறைவு விழா மன்னார்குடியில் நடைபெற்றது. இதில் விவசாய தொழிற் சங்க மாநிலத் தலைவர் கோ.வீரய்யன் தலைமை வகித்தார். கே.வரதராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:
தோழர் பி. இராமமூர்த்தி சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக போராடியவர். சாதி ஒழிய, சாதிக் கொடுமைகள் தீர ஆண்டவன் வருகிறானோ இல்லையோ கண்டிப்பாக செங்கொடி இயக்கம் வரும்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னமும் சாதிய கொடுமைகள் நீடிக்கிறது. ஆனால் இடதுசாரிகள் ஆளும் மாநிலங்களில் சாதிய ஒடுக்கு முறைகள் இல்லை. அதற்கு காரணம் அங்கு மக்களோடு இணைந்த ஆட்சி நடைபெறுகிறது.
நாம் என்ன செய்ய வேண்டும் என அமெரிக்கா நமக்கு உத்தரவு போடுவதற்கு மன்மோகன் சிங் அமெரிக்காவிற்கு ஓடிச் சென்று கையெழுத்திடுகிறார். நல்லவேளை கடந்த நான்கு ஆண்டுகாலமாக 61 இடதுசாரி எம்பிக்கள் செய்த தியாகத்தால் திவாலாகிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
உண்டியல் ஏந்துவதால் நாம் உறுதியோடு இருக்கின்றோம். சூட்கேஸ் வாங்கியவர்கள் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications