பூண்டி ஏரிக்கு வந்தடைந்த கிருஷ்ணா நதி நீர்
திருவள்ளூர்: கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நீர் பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது.
ஸ்ரீ சத்ய சாய் பாபா அறக்கட்டளை சார்பில் தமிழக பகுதியில் உள்ள கிருஷ்ணா நதிநீர் கால்வாய் பகுதியை சீரமைக்கும் பணிகள் நடந்தன.
இந்த பணிகள் முடிவடைந்ததை அடுத்து உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் கிருஷ்ணா நதிநீர் கால்வாய் பகுதியை பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்திற்கு, கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டது.
தமிழக-ஆந்திரா எல்லையான ஜீரோ பாயிண்ட்டுக்கு கிருஷ்ணா நீர் வந்தடைந்துள்ளது.
அங்கிருந்து சென்னை மக்களின் முக்கிய நீர் ஆதாரமான பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கிருஷ்ணா நீர் வந்தது.
பூண்டி நீர் வரத் தொடங்கியுள்ளதால், சென்னை நகருக்கு குடிநீர்ப் பிரச்சினை ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது உள்ள கையிருப்பின் மூலம் 2009ம் ஆண்டு வரையிலும் சிக்கல் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications