உளவுப் பிரிவுகள்-சிவராஜ் பாட்டீல் கோரிக்கை
டெல்லி: மாநில புலனாய்வு அமைப்புகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் கேட்டுக் கொண்டுள்ளார்.
தீவிரவாதத்தை ஒடுக்குவது, புலனாய்வு அமைப்புகளை பலப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க சில மாநில டிஜிபிக்களின் கூட்டத்தை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் டெல்லியில் நேற்று கூட்டினார். இதில் தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, மகராஷ்டிரா, ஆந்திரா, ஜார்கண்ட், ராஜஸ்தான், கேரளா மாநில டிஜிபிக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஹைதராபாத், பெங்களூர், அகமதாபாத், டெல்லி உள்ளிட்ட நகரங்களை தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கினர். தீவிரவாதிகளை கட்டுப்படுத்தவும், சதித்திட்டங்களை கண்டறிந்து முன்கூட்டியே முறியடிக்கவும் மாநிலங்களில் உள்ள புலனாய்வு அமைப்புகளின் கட்டமைப்புகள் நவீன முறைக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்ய வேண்டும்.
மாநில புலனாய்வு அமைப்புகளை பலப்படுத்த வேண்டும். அதற்கான பணிகளை டிஜிபிக்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சிறப்பு பிரிவு போலீஸாருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வகை செய்ய வேண்டும். சில மாநிலங்களில் புலனாய்வு அமைப்புகளின் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. இது கவலை அளிக்கிறது. கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது நடந்த தாக்குதல் கண்டனத்துக்குரியது. அங்கு சட்டம் மீறப்பட்டுள்ளது என்றார்.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications