342 கிராமங்களுக்கு குடிநீ்ர் சப்ளை துண்டிப்பு
சேரன்மகாதேவி: நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட 342 கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பைப் லைன்கள் பஸ் மோதியதால் உடைந்தது. இதனால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை, நாங்குநேரி டவுண் பஞ்சாயத்துகள், மேலத்திடியூர், இளையமுத்தூர், களக்காடு, நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய 5 யூனியங்களை சேர்ந்த 342 கிராமங்களுக்கு பத்தமடை தாமிரபரணி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த கூட்டுகுடிநீர் திட்ட பணி 2000ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. பத்தமடையில் உள்ள பம்பிங் ஸ்டேஷனில் இருந்து தினமும் 20 மணிநேரம் 70 லட்சம் லிட்டர் குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. சுமார் 3 லட்சம் மக்களுக்கு இதன்மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கான பிரதான குழாய் பத்தமடையில் இருந்து நெல்லை செல்லும் பறையர்குளம் வழியாக 38 பைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மதுரையில் இருந்து பாபநாசத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை திருப்பினார். அப்போது பஸ் நிலை தடுமாறி குளத்திற்குள் பாய்ந்தது.
இதில் கூட்டு குடிநீர் திட்டத்திற்காக அமைக்கப்பட்டுள்ள 34 குழாய்கள் உடைந்து சேதமடைந்தது. கூட்டுகுடிநீர் திட்ட பிரதான குழாய்கள் உடைந்ததால் திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம் பகுதியிலுள்ள 342 கிராமங்களுக்கும், 2 டவுண் பஞ்சாயத்துகளுக்கும், குடிநீர் விநியோகம் தூண்டிக்கப்பட்டது.
உடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க ரூ.8 லட்சம் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications