அஞ்சல் துறை தரும் அடையாள அட்டை: சென்னையில் அறிமுகம்
சென்னை: பெயர், விலாசம் உள்ளிட்ட தகவல்களுடன் கூடிய அடையாள அட்டையை அக்டோபர் 2வது வாரத்தில் சென்னையில் அறிமுகம் செய்கிறது அஞ்சல் துறை. ரூ.210 செலுத்தி இதை வாங்கிக் கொள்ளலாம்.
இதுகுறித்து சென்னை மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராமானுஜம் கூறுகையில், அஞ்சல் துறை புதிய முயற்சியாக அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை அடுத்த மாதம் 2வது வாரத்தில் தொடங்குகிறது.
இந்த அடையாள அட்டையில் அந்த நபரின் பெயர், முகவரி, ரத்த பிரிவு, அடையாள தழும்புகள் உள்ளிட்ட விவரங்களுடன் போட்டோ ஒட்டப்பட்டு இருக்கும்.
லேமினேஷன் செய்யப்பட்டு ஸ்மார்ட் கார்டு அளவில் இந்த போட்டோ அடையாள அட்டை வழங்கப்படும். இதற்கு ரூ.210 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை போஸ்ட் மாஸ்டர்கள் வழங்குவார்கள்.
3 ஆண்டுகள் வரை இதை பயன்படுத்தலாம். முகவரி மாறினால் அடையாள அட்டை ரத்து செய்யப்பட்டு விடும். மீண்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
சென்னைக்கு புதிதாக வருபவர்கள், மூத்த குடிமக்கள், வேலை தேடி வருவோர், வேலையில் சேருவோர், காஸ் மற்றும் டெலிபோன் விண்ணப்பிப்போருக்கு இந்த அடையாள அட்டை மிகவும் உதவியாக இருக்கும்.
அடையாள அட்டை வழங்கும் திட்டம் முதலில் சென்னையிலும் பின்னர் மற்ற நகரங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றார்.
-
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications